×

‘குக் கிராமம்’ சினிமா படத்தின் டிரெய்லர்

தர்மபுரி, டிச.30: தர்மபுரி பாலஜங்கமனஅள்ளி கிராமம் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் எம்.சிவா. இவர் நடித்து குக் கிராமம் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த ராமன் எழுதி, இயக்கியுள்ளார். குக் கிராமம் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா தர்மபுரி ஜிஎம் தியேட்டரில் நடந்தது. திமுக எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி கலந்து கொண்டு, டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், கதாநாயகன் எம்.சிவா, இயக்குனர் ராமன், திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி, வக்கீல் சிவன், பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான எம்.சிவா பேசுகையில், குக் கிராமம் திரைப்படம் கிராமங்களில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக முழுவதும் குக் கிராமம் படம் திரையிடப்படுகிறது என்றார்.

Tags : Cook Village ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா